16 January 2010

உன்
நினைவுகள்
என்றென்றும்
என்
ஆயுளின்
வரை
உயிர்வலி...!!!

(Un Nenaivugal Endrendrum En Aayulin Varai Uyir Vali...!!!)

01 January 2010

என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும்
பிரித்துச்செல்ல
நினைக்காதே - நீ
இல்லாமல் என்றும்
நான் இல்லையடி...!!!

(En Uyiril Kalantha Unnai Mattum Pirithuch Sella Nenaikkathe...Nee Illamal Endrum Naan Illaiyadi...!!!)
ஒவ்வொருமுறை
தும்மும்பொழுதும்
என் மனம்
சந்தோஷப்படுகிறது
நீ என்னை நினைப்பதாக
நினைத்து...!!!

(Ovvoru Murai Thummum Poluthum En Manam Santhosa Padukirathu Nee Ennai Nenaipathaga Nenaithu...!!!)

ஒவ்வொரு இரவிலும்
நான் சிந்தும் கண்ணீர்த்துளிகள்கூட
உன்னை சபிப்பதற்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றன - ஆனாலும்
அவைகள் நாணிக்குருகி
கரைந்து செல்கின்றன - நான்
உன் மேல் வைத்திருக்கின்ற
அன்பைப் பார்த்து...!!!

(Ovvoru Iravilum Naan Sinthum Kanneer Thuligal Kooda Unnai Sabipathatkaga Kaathuk Kondirukkindrana...Aanalum Avaigal Naanikkurugi Karainthu Selgindrana Naan Un Mel Vaithirukkindra Anbai Parthu...!!!)

உன்னைக் காண்பதற்காக காத்திருந்த கண்களும்
உன் வருகைக்காக காத்திருந்த கால்களும்
உன் மொழிகளைக் கேட்பதற்காக காத்திருந்த என் காதுகளும்
உன்னோடு பேசுவதற்காக காத்திருந்த என் உதடுகளும்
உன்னை அணைப்பதற்காக காத்திருந்த என் கரங்களும்
கேட்கின்றன - எங்கே உன் காதலி என்று..???

(Unnai Kaanpathatkaga Kaathiruntha Kangalum Un Varugaikkaga Kaathiruntha Kaalgalum Un Mozhigalai Ketpathatkaga Kaathiruntha En Kaathugalum Unnodu Pesuvathatkaga Kaathiruntha En Uthadugalum Unnai Anaipathatkaga Kaathiruntha En Karangalum Kekkindrana Enge Un Kaathali Endru...!!!)

நீ என்னை விட்டு
பிரியமாட்டாய்
என்று நினைத்தேன் - ஆனால்
பிரியாமல் இருப்பது
உன் நினைவுகள் மட்டும்தான்...!!!

(Nee Ennai Vittu Piriya Maataai Endru Nenaithen...Aanal Piriyaamal Iruppathu Un Nenaivugal Mattum Than...!!!)

நீ பிரிந்து சென்றபோதே
நான் இறந்துவிட்டேன் - ஆனாலும்
நீ என்னுள்ளே விட்டுச்சென்ற
தடயங்களை ஐம்பூதங்களால்கூட
அழிக்க முடியாது - நான்
உயிரோடு இருக்கும்வரை...!!!

(Nee Pirinthu Sendra Pothe Naan Iranthu Vitten...Aanalum Nee Ennulle Vittu Sendra Thadayangalai Aimboothangalal Kooda Azhikka Mudiyathu Naan Uyirodu Irukkum Varai...!!!)


நீ என்னைப் பிரிந்து
என் இதயத்தில்
வலியை ஏற்படுத்தியபோதும்கூட
உன் மேல் கொண்ட
அன்பும் காதலும்
கூடுகிறது பெண்ணே...!!!

(Nee Ennai Pirinthu En Ithayathil Valiyai Eatpaduthiya Pothum Kooda Un Mel Konda Anbum Kaathalum Koodukirathu Penne...!!!)